பாகுபலி-யின் தொடர்ச்சியான பாகுபலி-2 முன்கதையின் அனைத்து கேள்விகளுக்கும் விடையாகவே வந்து இருக்கிறது. மகிழ்மதி சாம்ராஜ்ஜிய அரியாசனத்திற்கு நடக்கும் சூழ்ச்சியும் அதன் விளைவுகளுமே பாகுபலி-2யின் கதைச்சுருக்கம். முதல் பாகத்தில் மகேந்திர பாகுபலி-யின் வீரத்தை ஒரு போர்க்களத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் இரண்டாம் பாகத்தில் மகேந்திர பாகுபலி-யின் பல பரிணாமங்களை அழகாக சுவாரசியம் குறையாமல் காட்சிபடுத்தி இருக்கிறார்.

படத்திற்கு CGI எனப்படும் computer graphics மிகப்பெரிய பலம் என்றாலும் சில இடங்களில் அதுவே செயற்கை தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. உதாரணத்திற்கு இறுதி காட்சியில் காட்டப்படுபவை அனைத்துமே ஒரு வீடியோ கேம் விளையாட்டு போன்றே உள்ளது. நல்ல வேளை நமது பெரும்பாலான தமிழ் படங்களில் கிராபிக்ஸ் என்ற பெயரில் காட்டப்பட்ட பொம்மை படங்கள் பாகுபலி-யின் கிராபிக்ஸ் எவ்வளவோ மேல் என்றே நம்ப வைக்கின்றது.
பாகுபலியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, நடிகர் நடிகையர் தேர்வு. தமிழ் இயக்குனர்களே கதைக்காகதான் நடிகர்களே தவிர அவர்களுக்காக கதை அல்ல என்பதை பாகுபலி போன்ற வெகுஜன சினிமாக்களில் புரிந்து கொள்ளுங்கள்.

baahubali-prabhas
மகேந்திர பாகுபலியாக வரும் பிரபாஸ் இனிவரும் காலத்தில் பாகுபலியை விட நல்ல கதைக்களம் கொண்ட படத்தில் நடிப்பது சாத்தியமே. ஆனால் ஒரு வீரதீரமிக்க மன்னனாக வாழ்வது வெகு அரிது. அந்த அளவுக்கு படம் முழுக்க வியாபித்திருக்கும் பிரபாஸ் மகேந்திர பாகுபலியாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அவரின் ஆண்மையான கதாபாத்திரம்.

baahubali-anushka
முதல்பாக கதையை பாகுபலி கதாபாத்திரமே சுமந்த சூழலில் இரண்டாம் பாகத்தில் தேவசேனையாக வரும் அனுஷ்கா அப்பணியை பகிர்ந்து கொள்கிறார். பெண்மையில் ஆண்மை காட்டும் அவரது நடிப்பு மாநில விருதல்ல, தேசிய விருதுக்கே தகுதி படைத்தது. காதலன் ஆனாலும் கைது செய்ய தன் தன்மானம் இடம்கொறவில்லை என்பதில் ஆரம்பித்து சிவகாமி தேவியை எதிர்த்து அரசவையில் கர்ஜிப்பது வரை தேவசேனையை அனுஷ்கா-வை தவிர ஒருபோதும் எவராலும் ஈடுசெய்ய முடியாது.

baahubali-sivagami-ramya-krishnan
சிவகாமியாக வலம் வந்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மகிழ்மதியை தன் மதிநுட்பத்தால் ஆட்சி செய்யும் சிவகாமி தேவியை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். மருமகளிடம் கடிந்து கொள்வதாகட்டும், தான் தவறிழைத்தது தெரிந்து மன்னிப்பு கேட்பதாகட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் அவரே. ஏன் ரம்யா, “திரைப்படங்களில் இவ்வளவு நேர்த்தியாக நடிப்பதாகட்டும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதாகட்டும் திறம்பட செய்யும் நீங்கள் தங்கள் சொந்த தொலைக்காட்சி தொடரில் அபத்தமான காட்சிகளையும், கேவலமான வசனங்களையும் அனுமதிக்கீறிர்கள்”.

baahubali-raana
பல்லாலதேவா கதாபாத்திரம் கனகச்சிதமாகப் ராணாவிற்கு பொருந்தி-யிருக்கிறது அவரது ஆளுமையான தோற்றமே கதாபாத்திரத்திற்கு அதிக பலம் சேர்க்கிறது. இருந்தாலும் இறுதி காட்சியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவரை கையாண்டிருக்கலாம்.

Why-kattappa-killed-bahubali
சத்தியராஜின் கட்டப்பா கதாபாத்திரமே திரைக்கதைக்கு மிகப்பெரிய ஆணிவேர். எல்லா முடிச்சுகளையும் அங்கிருந்தே தொடங்கி அவரையே அவிழ்க்க செய்திருக்கிறார் ராஜமௌலி. சத்தியராஜின் ‘நாடோடி மன்னன் போன்ற மன்னர் ஆட்சி காவியத்தில் நடிக்க வேண்டும்’ என்ற ஆசையை நிறைவேற்றியதோடு அவரின் மிக நேர்த்தியான நடிப்பை கண்முன் கொண்டுவந்து தமிழரான நம்மையும் பெருமிதம் கொள்ள செய்திருக்கிறார் இயக்குனர். தமிழ் இயக்குனர்களே ராஜமௌலி போன்ற கதைக்கு விசுவாசியாக இருக்க, கதாபாத்திரங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இன்னும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சத்யராஜ் போன்ற கலைஞனை வெறும் லொள்ளு நடிகராகவே காண்பித்த பல இயக்குனர்கள் பாகுபலி கட்டாயம் காணவேண்டும்.

பிஜுலதேவா கதாபத்திரம் ஏற்றிருக்கும் நாசர் மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிறிக்கிறார். சூழ்ச்சிகளின் பின்னல் எப்படி ஒரு குடும்பத்தை, ஒரு நாட்டை சிதைக்கிறது என்பதை பிஜுலதேவா கதாபத்திரம் வெகுவாக உரைக்கிறது. பல படங்களில் நாசரின் தேர்ந்த நடிப்பாற்றல் வெளிபட்டிருந்தாலும் பிஜுலதேவா கதாபத்திரம் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது.
முன்பாகத்தில் கொஞ்சம் அதிகமாகவே உழைத்து விட்டதால் தமன்னாவிற்கு இரண்டாம் பாகத்தில் அதிக வேலையில்லை.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் வசனங்களில் அதிகம் ஈர்த்திருக்கிறார் மதன் கார்கி. தமிழ் மொழிபெயர்ப்புதான் என்றாலும் வசனங்களின் தமிழ் உச்சரிப்பில் சிறிது அனலை கலந்து மெருகேற்றி இருக்கிறார்.ஒளிப்பதிவு, கலையமைப்பு, உடை அலங்காரம் என்று படத்திற்கு பலம் சேர்க்கும் விஷயங்கள் பல. ஆனால் அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து உருப்படியான கலவையாக்கி திரை காவியம் வடித்திருக்கும் ராஜமௌலி இந்திய திரை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவர் என்றால் மிகையாகாது.

ஒரு பாட்டுக்கு மட்டும் கோடிகளை வாரி இறைத்து ரயிலுக்கு வண்ணம் பூசி பிரமாண்டம் என்னும் சங்கர் போன்ற இயக்குனர்கள் இனியாவது பிரமாண்டத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளட்டும். ஏ கிளாஸ் ரசிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கும் மணிரத்னத்தின் படங்களை அணைத்துவித ரசிகர்களையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட பாகுபலியோடு சத்தியமாக ஒப்பிட முடியாது. அவரின் இராவணன் ராமாயணத்தின் மறுஉருவாக்கம் என்றாலும் இன்றளவிலும் பெருபான்மை மக்களுக்கு அப்படம் புரிவதில்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற வரிகொண்டு அவரின் படைப்புகள் இன்றளவில் விமர்சனம் இன்றி தவிக்கின்றன.

ஆனாலும் நம்மூர் அமீரால் படைக்கப்பட்ட பருத்தி வீரனும், பாரதிராஜாவின் சப்பாணியோ பாகுபலிக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதவர்கள். தேவசேனை கதாபாத்திர வடிவமைப்பு பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினி துணையில்லாமல் வடிக்கப்பட்டிருக்காது

பாகுபலியை போன்ற திரைக்காவியங்கள் இந்திய திரையுலகில் வெகு அரிதே. ராஜமௌலியே நினைத்தாலும் பாகுபலியை தாண்டி ஒரு படம் எடுப்பது கொஞ்சம் கடினமே.

தமிழ் ராக்கர்ஸ் போன்ற திரைப்பட பதிவிறக்கதளங்களால் திரைத்துறை அழிந்து வருகிறது என்ற கருத்தை முன்வைக்கும் நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் (இந்த கட்டுரை எழுதப்படும் இன்று வரை இவை மட்டுமே) விஷால் போன்றோருக்கு பாகுபலியின் வெற்றி சொல்லியிருக்கும் செய்தி ஒன்றே. நல்ல திரைப்படம் என்றால் எந்த விஷகிருமிகளாலும் அதன் வெற்றியை அழிக்க முடியாது. மக்கள் ஆதரவு இருந்தே தீரும். நல்ல படங்களை எடுக்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள், எந்த சக்தியாலும் உங்கள் வெற்றியை தடுக்க முடியாது.

பாகுபலி ஒரு படம் மட்டுமன்று. அது ஒரு படிப்பினை.
rajamouli-baahubali

Facebook Comments
https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2017/05/Bahubali-2-The-Conclusion-HD-Images-Pics-Wallpapers-Shooting-Stills.jpg?fit=960%2C451https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2017/05/Bahubali-2-The-Conclusion-HD-Images-Pics-Wallpapers-Shooting-Stills.jpg?resize=150%2C150maadminReviewsanushka,Baahubali,drama,epid,movie,rajamouli,tamilபாகுபலி-யின் தொடர்ச்சியான பாகுபலி-2 முன்கதையின் அனைத்து கேள்விகளுக்கும் விடையாகவே வந்து இருக்கிறது. மகிழ்மதி சாம்ராஜ்ஜிய அரியாசனத்திற்கு நடக்கும் சூழ்ச்சியும் அதன் விளைவுகளுமே பாகுபலி-2யின் கதைச்சுருக்கம். முதல் பாகத்தில் மகேந்திர பாகுபலி-யின் வீரத்தை ஒரு போர்க்களத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் இரண்டாம் பாகத்தில் மகேந்திர பாகுபலி-யின் பல பரிணாமங்களை அழகாக சுவாரசியம் குறையாமல் காட்சிபடுத்தி இருக்கிறார். படத்திற்கு CGI எனப்படும் computer graphics மிகப்பெரிய பலம் என்றாலும் சில இடங்களில் அதுவே செயற்கை...a SWOT Media Blog