swathi murder
Image Courtesy: NewsGlitz

ஸ்வாதி, சென்னையில் பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண். நேற்றைய வாசகர்களின் தினசரிகளிருந்து இன்றைய இணையவியலாளர்களின் முகநூல் வரை இதைப் பற்றியே பேசுகிறோம், காவல்துறை நிபுணர்களை விட அதிகமாக சந்தேகங்களை எழுப்புகிறோம். குற்றவாளி அகப்பட்ட பின்புகூட அவன் மீதான எதிர்ப்புகளை விட அவள் மீதான அவள் நடத்தை மீதான சந்தேகங்களே இங்கு அதிகமாக வாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. ஏன் இப்படி?

ஸ்வாதி படுகொலை செய்யப்பட்ட அதே தினத்தன்று அதே சென்னையில் 4 பெண்களை ஒரு கொடூரன் கொலை செய்த சம்பவம் – எவ்வித வாதங்களுமின்றி மறக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு கொலையாளியோடு கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இந்த ஒரு காரணத்தாலேயே இந்த கொலை நாம் அனைவரையும் துளிகூட பாதிக்கவில்லை.

இங்கு ஒரு பெண்ணின் சாவோ அவளை போன்ற வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்போ முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாறாக அந்த கொலைக்கான பின்னணியை, அவளின் தனிப்பட்ட அந்தரங்கங்களை விமர்சிக்கவே நாம் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். ஊடகங்களுக்கு சொல்லவே தேவை இல்லை. ஸ்வாதி கொல்லப்பட்ட அன்று எவரேனும் அருகில் இருந்திருந்தால் அதையும் நேரடியாக ஒளிபரப்பி இருப்பார்கள் போல.

ஸ்வாதி ஒரே ஒரு முறை ராம் குமார் என்னும் கொலையாளியால் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் அப்பெண்ணின் பெண்ணியத்தை தினம் தினம் கொன்று கொண்டு இருக்கிறோம். அவர் எக்காரணத்திற்கு வேண்டுமானாலும் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்கு தேவை ஸ்வாதி போன்ற இன்னோரு இறைவியை இழக்காமல் இருப்பதே.

Facebook Comments
https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2016/07/maxresdefault.jpg?fit=1024%2C576https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2016/07/maxresdefault.jpg?resize=150%2C150maadminNewschennai,news,tamilஸ்வாதி, சென்னையில் பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண். நேற்றைய வாசகர்களின் தினசரிகளிருந்து இன்றைய இணையவியலாளர்களின் முகநூல் வரை இதைப் பற்றியே பேசுகிறோம், காவல்துறை நிபுணர்களை விட அதிகமாக சந்தேகங்களை எழுப்புகிறோம். குற்றவாளி அகப்பட்ட பின்புகூட அவன் மீதான எதிர்ப்புகளை விட அவள் மீதான அவள் நடத்தை மீதான சந்தேகங்களே இங்கு அதிகமாக வாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. ஏன் இப்படி? ஸ்வாதி...a SWOT Media Blog