கடந்த 5 நாட்களாக நம்மை படாதப் பாடுப்படுத்தும் 500,1000 பிரச்சினை நாம் அனைவரும் அறிந்ததே. இதெல்லாம் தேவையில்லாத செயல் என்று சிலரும், இது கறுப்புப் பணத்தை கண்டிப்பாக ஒழித்துவிடும் என்று பலரும் எண்ணிக்கொள்கிறோம்.

மத்திய அரசின் Financial Surgical Operation against Black Money & Corruptions என்று சித்தரிக்கப்படும் இந்த நடவடிக்கை 500, 1000 கரன்சிகளை அதிகமாக வைத்திருப்போரின் வயிற்றில் சற்றே புளியை கரைக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் கேள்வி இந்த நடவடிக்கை உண்மையாகவே கருப்புபண முதலைகளை நோக்கியா அல்லது தங்களை நோக்கியா என்பதே.

இப்பிரச்சினையில் 1000 ரூபாய் நோட்டுகளை விட்டு விடுவோம். பாவம் நமது இந்திய மக்களில் பெரும்பாலானோர் அதனை அதிகமாக உபயோப்பதில்லை. ஆனால் 500 ரூபாய் நோட்டுகள் சர்வ சாதாரணமாக நாம் அனைவரிடம் புழக்கத்தில் உள்ளது. அதனை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்திருப்பது மக்கள் அனைவரையும் பீதிக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

அரசு மிக ரகசியமாக வைத்திருந்ததாக சொல்லப்படும் இந்த அறிவிப்பு பல ஊடகங்களிலும், இன்டர்நெட்டிலும் முன்பே வெளியாகிப்போனது யாருக்காக? தற்போதும் சிறிய முதலைகள் கமிஷன் ஏஜெண்ட்களை நம்புகின்றனரே தவிர ஒரு போதும் திருந்தப்போவதில்லை. 2000 நோட்டுகளும் அவர்களை ஆதரிப்பதாகவே உள்ளது.

இந்திய போன்ற அரசு இயந்திரம் மிக மெதுவாக இயங்கும் நாட்டுக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் எதற்கு? இத்திட்டத்தை உடனடியாக அறிவித்த அரசால் ஏன் இன்னமும் 500 புது நோட்டுகளை விநியோகிக்க முடியவில்லை? இத்திட்டம் அறிவிக்கப்பட்டால் 100, 50 அதிகமாக தேவைப்படும் என்பது கூடவா நம் பிரதமருக்கு தெரியாது? இக்கட்டுரை எழுதப்படும் இன்றும் ATM, BANK இரண்டிலியுமே பணப்பற்றாக்குறை மிக அதிகமாகவே உள்ளது. எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இன்றி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுதான் என்ன?!

இப்படி நம்மைசுசுற்றி பல கேள்விகள் எழுந்தாலும் இதனால் 80% பாதிக்கப்படுவது நம்மைபோன்ற நடுத்தர மக்களும், வியாபாரிகளுமே. மத்திய அரசோ/ மாநில அரசோ அதற்கு பதில் அளிக்கப்போவதும் இல்லை. மாறாக மோடி செய்யும் அடுத்த வித்தை இதற்கான பதிலாய் அமையலாம். பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Facebook Comments
https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2016/11/money-rupee-759.jpg?fit=759%2C422https://i0.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2016/11/money-rupee-759.jpg?resize=150%2C150maadminNews100,500,currency,india,modiகடந்த 5 நாட்களாக நம்மை படாதப் பாடுப்படுத்தும் 500,1000 பிரச்சினை நாம் அனைவரும் அறிந்ததே. இதெல்லாம் தேவையில்லாத செயல் என்று சிலரும், இது கறுப்புப் பணத்தை கண்டிப்பாக ஒழித்துவிடும் என்று பலரும் எண்ணிக்கொள்கிறோம். மத்திய அரசின் Financial Surgical Operation against Black Money & Corruptions என்று சித்தரிக்கப்படும் இந்த நடவடிக்கை 500, 1000 கரன்சிகளை அதிகமாக வைத்திருப்போரின் வயிற்றில்...a SWOT Media Blog