நாம் போராட வேண்டிய களம் இன்னும் பல உண்டு, தண்ணீர், மேற்குத்தொடர்ச்சி மலை, காடுகள், மரங்கள், யானை, விவசாயம், சிட்டுக்குருவி, நாட்டு நாய்கள், மணல் திருட்டு, கல்வி கட்டணங்கள் இன்னும் பல – கருப்பு பணத்தை தவிர்த்து!!

சிட்டுக்குருவிகள் அழிந்து வர காரணங்கள் செல்போன் டவர் மட்டுமே அல்ல. நாம் அனைவருமே தான். யார் வீட்டில் இப்பொழுது தோட்டம் உண்டு? யாராவது என்றாவது சிட்டுக்குருவிக்கு உணவிட்டிருக்கிறோமா? சிட்டுக்குருவிக்கு தங்கள் வீட்டில் சிறிய அளவில் இடம் கொடுத்தவர் நம்மில் எத்தனை பேர்? சிட்டுக்குருவி வாழ்வியலை பற்றி உங்களுக்கு தெரியுமா? – எதையாவது யாராவது செய்தால் அதற்கு லைக் போட்டால் போதும் என்கிற மனநிலை நம்மில் பலருக்கும் வந்து வெகுநாட்கள் ஆகிறது.

யானைகளின் வழித்தடங்களை அழித்து யோகா மையம் அமைத்து அதில் நாம் அமைதி தேட நினைக்கிறோம். காடுகளை அழித்து அங்கு ஹோட்டல் கட்டி உல்லாச ஓய்வு எடுக்கிறோம். மழைக்காடுகளை அழித்து அங்கு பயிரிடப்படும் தேயிலையில் தேநீர் அருந்தி மகிழ்கிறோம்.

மணல் திருட்டா, அதை பற்றி நம்மில் பலருக்கு என்னவென்றே தெரியாது. நம் மாநிலத்தின் மணல் திருட்டில் 80% அண்டை மாநிலங்களுக்காவே. இதன் உண்மை என்றேனும் நமது அரசையோ அதிகாரிகளையோ விழிக்க வைத்திருக்கிறதா?

கல்வி கட்டணத்தை நாமே விரும்பி ஏற்றுக்கொண்டோம். அதிகமான கல்வி கட்டணம் என்றால் தரமான கல்வி என்றும் அரசு பள்ளிகளில் என்றால் அது தரமற்றது என்றும் நாமே ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்.

ஒரு பக்கம் காளைகளுக்குக்காக போராடுவோம். மறுபக்கம் சாலைகளில் திரியும் மாடுகளை பற்றி அக்கறை கொள்ள மாட்டோம். அது என்ன சாப்பிடும் என்பதை என்றாவது யோசித்து இருக்கிறோமா? நான் சென்ற ஒரு சாலையில் அடிபட்டு கிடந்த ஒரு பசுவை கண்டும் காணாமல் பைக்கில் பறந்த ஒரு கூட்டம் தான் காளைகளுக்குக்காக வெகு தீவிரமா போராடியது, வெட்கக் கேடு.

இன்னும் நாம் போராட வேண்டிய களம் பல உண்டு மக்களே!
அதற்கு முன் நம்மையும் கொஞ்சம் திருத்தி கொள்வோம்.

Facebook Comments
https://i1.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2017/03/protest.png?fit=620%2C330https://i1.wp.com/modelsagency.in/news/wp-content/uploads/2017/03/protest.png?resize=150%2C150maadminEventsNewsarticles,india,news,tamilnaduநாம் போராட வேண்டிய களம் இன்னும் பல உண்டு, தண்ணீர், மேற்குத்தொடர்ச்சி மலை, காடுகள், மரங்கள், யானை, விவசாயம், சிட்டுக்குருவி, நாட்டு நாய்கள், மணல் திருட்டு, கல்வி கட்டணங்கள் இன்னும் பல - கருப்பு பணத்தை தவிர்த்து!! சிட்டுக்குருவிகள் அழிந்து வர காரணங்கள் செல்போன் டவர் மட்டுமே அல்ல. நாம் அனைவருமே தான். யார் வீட்டில் இப்பொழுது தோட்டம் உண்டு? யாராவது என்றாவது சிட்டுக்குருவிக்கு உணவிட்டிருக்கிறோமா? சிட்டுக்குருவிக்கு...a SWOT Media Blog